மக்கள் கேள்வி: எம்மிடம் வந்த முதல் மக்கள் குரல்!
பல கிராமங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் கல்வி கற்கும் பள்ளி தொடர்பான பொதுமக்கள் பதிவு கிடைத்துள்ளது. தகவல்களைச் சரிபார்த்து முழு விவரங்கள் வெளியிடப்படும்.
ஒரு பள்ளியின் பிரச்சினை… பல கிராமங்களின் கல்வித் தேவை!
மன்னார் நோக்கின் “மக்கள் கேள்வி” பகுதிக்கு, பள்ளியொன்று எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பான முதல் பொதுமக்கள் பதிவு கிடைத்துள்ளது.
எமக்குக் கிடைத்த தகவலின்படி, இரு மாவட்டங்களின் பல கிராமங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் கல்வி கற்கும் பள்ளியுடன் தொடர்புடைய விடயம் இது. அந்தப் பிள்ளைகளின் கல்வித் தேவைகள் உரிய கவனம் பெற வேண்டும் என்பதே எம்மிடம் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்பார்ப்பு.
பள்ளியின் பெயர், பிரச்சினையின் தன்மை மற்றும் பின்னணி உள்ளிட்ட தகவல்களைச் சரிபார்த்து, முழு விவரங்களுடன் விரைவில் வெளியிடுவோம்.
மக்களின் குரலுக்கு இடம் கொடுப்போம். பிள்ளைகளின் கல்வித் தேவைகளைக் கவனத்திற்குக் கொண்டுவருவோம்!